தேனில் ஊறவைத்த இஞ்சி: இரட்டிப்பு நன்மைகள்

தேனில் ஊறவைத்த இஞ்சி என்றால் என்ன?


தேனில்
ஊறவைத்த இஞ்சி என்பது, இஞ்சி மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கலவையாகும். இதில், இஞ்சியின் நன்மைகள் மற்றும் தேனின் மருத்துவ பண்புகள் ஒன்றாக இணைந்து, உடலுக்கு பல பயன்களை வழங்குகின்றன. தேனில் ஊறவைத்த இஞ்சியை தினசரி சாப்பிடுவதன் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.

ஏன் தேனில் ஊறவைத்த இஞ்சி உடலுக்கு சிறந்தது?

நாம் தனித்தனியாக தேனையும், இஞ்சியையும் பயன்படுத்தி அதன் மருத்துவ நன்மைகளை அறிவோம். ஆனால், தேனில் ஊறவைத்த இஞ்சி பயன்படுத்தினால், அதன் மருத்துவ குணங்கள் இரட்டிப்பாக அதிகரிக்கின்றன.


தேன் ஒரு தனிப்பட்ட மருந்தாக மட்டுமன்றி பிற நாட்டு மருந்துகளோடு சேர்க்கும் போது வினையூக்கியாக
 (CATALYST) செயல்படுகிறது. இஞ்சியை தேனில் ஊறவைத்தால், இஞ்சியின் சத்துக்கள் தேனின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களுடன் இணைந்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்காக அதிகரிக்க செய்கின்றன.

பழங்கால மருத்துவதில் தேனின் முக்கியத்துவம்: 



சில மருந்துகளை உட்கொள்வது கடினமாகவோ அல்லது சங்கடமாகவோ இருக்கும். இத்தகைய மருந்துகளுடன் தேன் சேர்த்து உண்பது பழங்கால மருத்துவ முறைகளில் பரிந்துரைக்கப்படுகிறது.

ஏனெனில், தேன் ஒரு இயற்கை வினையூக்கி ஆக செயல்பட்டு, மருந்தின் செயல்திறனை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, தேனில் ஊறவைத்த இஞ்சி சாப்பிடுவதன் மூலம் நீங்கள் இனிப்பு சுவையுடன் மருத்துவ நன்மைகளையும் பெற முடிகிறது.


தேனில் ஊறவைத்த
இஞ்சியின் உடல்நல நன்மைகள்:


  •           அஜீரண கோளாறுகளை சரி செய்யவவும், வயிற்று தொற்றுதல் நோய்க்கும் நல்ல மருந்தாக அனைவராலும் பரிந்துரைக்கப்படுகிறது.

  •       இது ஈறு தொற்றுகளை குணப்படுத்தும் மருந்தாகவும், கிருமி நாசினியாகவும் சிறப்பாக செயல்படுகிறது.

  •      மேலும், குமட்டல் மற்றும் வயிற்று வலிகளை குறைக்கும் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது.

தேனில் ஊறவைத்த இஞ்சியின் மருத்துவப் பயன்கள்:

இரைப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

செரிமான நொதிகளின் சுரப்புக்கு உதவுவதன் மூலம் அஜீரணம், வீக்கம் போன்ற இரைப்பை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க தேனுடன் கலந்த இஞ்சி நன்கு உதவுகிறது.

மேலும் கொழுப்பைக் கரைக்கவும், செரிமான செயல் முறையை துரிதப்படுத்தவும் உதவுகிறது.

இது ஒரு நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது மற்றும் நம் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.

சளி மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வு:

சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மூக்கடைப்பு, சளி, தொண்டைபுண், இருமல் போன்றவற்றுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.


அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சுவாச நலக்குறைவை சீராக்கவும்
, சரி செய்யவும் உதவுகிறது.

 குமட்டல் மற்றும் காலை நோய்க்கு உதவும்:

இது வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குறைத்து நிலையாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும், இதனால் குமட்டல், வாந்தி மற்றும் (கர்ப்பகாலத்தில்காலை அழற்சி நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

பல நூற்றாண்டுகளாக காலை நோய்க்கு (கர்ப்பகாலத்தில்) சிகிச்சையளிப்பதில் இது நீண்டவரலாற்றைக் கொண்டுள்ளது.

இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயல்முறைக்கு இது ஒரு பயனுள்ள கலவையாகும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.


பின்னர்
, இது மெக்னீசியம் மற்றும் குரோமியம் முன்னிலையில் வெள்ளை இரத்த அணுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

தேனில் ஊறவைத்த இஞ்சி பற்றி மேலும் அறியவும்,
https://www.wildhoneyhunters.com/product/ginger-in-honey/




Post a Comment

Previous Post Next Post