நாவல் தேன் (Jamun honey)

 நாவல் தேன்

               


             *நாவல் தேன் சுவையில் இனிமையான மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒரே சுவையான தேன் ஆகும். இயற்கையான நாவல் தேன் அடர் நிறத்தில் பூவின் நறுமணத்துடன் இருக்கும்.

             *நாவல் மரங்களின் வருடாந்திர பூக்கள் பூக்கும் பருவத்தில் நாவல்தேன் சேகரிக்கப்படுகிறது. மேலும், அந்தப் பருவத்தில் சேகரிக்கப்படும் தேனில் மருத்துவ குணங்களும், பூவின் அனைத்து நன்மைகளும் தேனில் காணப்படுகின்றன.

             * நாவல் தேன் கசப்பாக இருப்பினும், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் விரும்பும் ஒரு தனித்துவமான குணத்தை அளிக்கிறது.

நாவல் தேன் பயன்கள்

    *நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாவல் தேனின் பயன்கள் ஒரு சிறந்த தீர்வாகும். நாவல் தேன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

             *மேலும், அதிகப்படியான தாகம் மற்றும் சிறுநீர்கழித்தல் போன்ற நீரிழிவு அறிகுறிகளை குணப்படுத்துகிறது.


             *தூக்கம் மற்றும் உடற்பயிற்சியின் போது கல்லீரலில் போதுமான எரிபொருளுக்கு உகந்த குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் மிகவும் முக்கியமானது.

             *நாவல்தேன் சிறந்த கல்லீரல் எரிபொருளாகும். ஏனெனில், இது பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸின் விகிதத்தைக் கொண்டுள்ளது.

             *நாவல் தேன் ஆன்டி ஆக்ஸிடென்ஸ், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், மற்றும் பல முக்கிய நுண்ணூட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

நாவல் மரம்

             *நாவல் மரத்தின் இலை, பழம், வேர், விதை, என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டவை.


             *மரத்தின் அனைத்து பகுதிகளும் இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின் மற்றும் தாமர சத்துக்களை மரத்தின் பாகங்கள் மற்றும் நாவல் தேன் கொண்டுள்ளது.

              *உடலில் ஹீமோகுளோபின் சத்து குறைவாக இருக்க உடலில் இரும்பு சத்து குறைபாடும் ஒரு காரணம் இதனை நிவர்த்தி செய்ய தேனின் பயன்கள் உதவுகின்றன. மேலும் உடலில் உள்ள எலும்புகளுக்கு வலிமை கொடுக்கவும் தேன் உதவுகிறது.

நாவல் இலைகள்

                நாவல் இலைகள் எப்படி ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் 


            * நாவல் இலையில் உள்ள எலாஜிக் அமிலம் மற்றும் குவார்செடின் என்னும் பாலிபினால் போன்ற ஆன்ட்டிடயாபட்டிக் பண்புகளைக் கொண்டுள்ளன. அதனால் இது நீரிழிவை கட்டுக்குள் வைக்கவும் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கவும் செய்யும்.

           * இலைகளில் மைரிசெட்டிங் எனப்படும் பிளாவனாய்டும் நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளை கொண்டிருப்பதால் ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் நாவல்இலை மற்றும் நாவல் தேன் உதவி செய்கிறது.

            *நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் நாவல் இலையை மென்று அதன் சாரை விழுங்க வேண்டும்.

நாவல் பழம்

                                       நாவல் பழம் நன்மைகள்

            *நாவல் பழம் ஆன்ட்டிபயாடிக் பண்புகள் நிறைந்த பழம் இதனை தினமும் உண்டு வரும் போது உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். மேலும், உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் காக்கிறது.


           *நாவல்பழத்தில் அதிக அளவு நார் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலுக்கு பலவித நன்மைகள் அளிக்கக்கூடிய ஒன்றாகும். நாவல் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் நாவல் பழத்தை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

          *நாவல்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பல வித வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. நாவல் பழத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள், அதிக அளவு ஆன்ட்டிஆக்சிடெண்ட்யும் கொண்டுள்ளது.

          *தினமும் நாவல் பழம் உண்பவர்களுக்கு 30% புற்றுநோய் ஏற்படுவது குறைவு என பல வித ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், நாவல் தேன் மற்றும் பழம் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்க உதவுகிறது.

நாவல் விதைகள்

                                           நாவல் விதைகளின் பயன்கள்

          *நாவல் தேன் மற்றும் விதைகள் இரண்டிலும் இருக்கும் ஜம்போலினின் மற்றும் ஜம்போசின் என்னும் குளுக்கோசைட் டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதை தாமதமாக்குகின்றன. இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.


          * நாவல் பழங்கள் மற்றும் நாவல்தேன் மட்டுமல்லாது அதன் விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

*நாவல் விதைகளை பதப்படுத்தி பவுடராக்கி சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு பலன் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாவல் விதை பொடி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.

*நாவல் பழமும் அதன் விதைகளை சாப்பிடுவதால் மூளை பலமாகும். மேலும், ஜீரண சக்தி அதிகரிக்கவும் மற்றும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.

 மேலும் படிக்க

https://www.wildhoneyhunters.com/product/jamun-honey/





                                          





Post a Comment

Previous Post Next Post