வேப்பம் பூ தேன் :
- வேப்ப மரத்தில் இருந்து நமக்கு வேப்பம் பூ
தேன் கிடைக்கிறது. வேப்பம் பூ தேன் மார்ச், ஏப்ரல், மே போன்ற
மாதங்களில் அதிக அளவு காணப்படும். அப்பொழுது காட்டு தேன் பூச்சிகள் அதில் உள்ள
மகரந்தத்தை உட்கொண்டு தேன்கூடு கட்டும். அதுவே
வேப்பம்பூ தேன் என அழைக்கப்படும்.
·
நரம்பு, தோல், எலும்பு போன்றவற்றிற்கு அதிக அளவு
சக்தியை தருகிறது.
·
அதிக
வெப்பத்துவம் நீரிழிவு, பூஞ்சை தொற்று, பாக்டீரியா போன்ற நோய்களை சரி செய்ய
பயன்படுத்தப்படும்.
· வேப்ப இலையில் வேப்பம் பூ தேன் கலந்து
சாப்பிடும் போது சருமத்தை அழகாகவும் மற்றும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும்
வைத்திருக்கும். வேப்பம் பூ தேன் அதிக மருத்துவ குணங்களை உள்ளடக்கியது .
· சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
காலில் ஏற்படும் புண்கள் நன்றாக ஆறவும் அங்கே புதிய
திசுக்கள் ஆரோக்கியமான முறையில் உற்பத்தியாகவும் பயன்படுகிறது .
·
இவ்வகை
தேன் சற்றே கசப்பு, புளிப்பு, துவர்ப்பு
சுவைகளை கொண்டு இருக்கும், இவ்வகை காட்டுத் தேனினை ஒருமுறை
சுவைக்கும் பட்சத்தில் பிற தேன்களை நாம் சற்றே ஒதுக்கி வைப்போம்.
வேப்பமரம்:
·
வேப்பமரத்தில்
உள்ள வேப்ப இலை ,வேர்கள்,
பழங்கள்,பூக்கள் என அனைத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
· பெரும்பாலான தாவரங்கள் மற்றும்
மரங்களில் சில பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வேப்பமரத்தில்
மட்டுமே அனைத்து பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது.
·
வேப்பமரம் மற்றும்
வேப்ப இலையில் கிருமி
நாசினி இருப்பதால் பல நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது மற்றும் புதிய ஆக்சிஜன் போன்றவற்றை நமக்கு தருகிறது.
வேப்ப இலை:
- வேப்ப இலை நாட்டுப்புற
மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் வேப்ப இலை பயன்பாடு உலகம் முழுவதும்
அறியப்பட்ட ஒன்றாகும்.
- வேப்ப இலை
வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிஜன் பண்புகளை கொண்டுள்ளது .
- வேப்ப இலை ஆயுர்வேதம்
சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
- வேப்ப இலை தோல் நோய்களுக்கு அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.
- வேப்ப இலை தொற்று நோய்களை தடுக்கிறது மற்றும் பல்வேறு வகையான
அம்மை நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
- வேப்ப இலை
சருமத்தை இளமையாகவும்,
பளபளப்பாகவும், நிறமாகவும் வைத்திருக்கும்.
- சருமத்தை வறண்ட
நிலையில் வைத்திருக்க வேப்ப இலை மருந்து பயன்படுத்தப்படுகிறது .
- வேப்ப இலை உட்கொள்ளும்
பொழுது செரிமானத்துக்கு உதவும் அதிக உடல்
எடையை குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது .
வேப்பம் பூ:
- வேப்பம்பூவில்
உள்ள மகரந்தம் அதிக அளவு மருத்துவ குணங்களை உடையது. அதை நமக்கு தேனPக்கள் நேரடியாக
தேன் மூலமாக தருகிறது.
- வேப்பம்பூவில்
உள்ள மகரந்தம் வயிற்று வலிக்கும், செரிமானத்திற்கும், தோல் நோய்
பிரச்சனைகளுக்கும் பூஞ்சை கொல்லிகளுக்கும் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை
தருகிறது .
வேப்ப விதை:
- வேப்ப விதை
இயற்கையாக முடி வளர்வதற்கும், அழகு
சாதனப்பொருட்கள் தயாரிப்பதற்கும், தோல்
நோய்களுக்கு மருந்து மற்றும் சோப்பு தயாரிக்கவும்
பயன்படுகிறது.
- வேப்ப விதை
பாரம்பரிய விவசாயத்திலும், நவீன
விவசாயத்திலும் இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்படுத்தப்பட்டது.
- வேப்ப
விதையிலிருந்து கிடைக்கும் வேப்ப எண்ணெய் உடலுக்கு உடலுக்கு குளிர்ச்சியை
தருகிறது.