கொம்பு தேன்
*கொம்புத்தேன் மிகவும் அரிதான மற்றும் விலைமதிப்பற்ற காட்டு தேன்களில்
ஒன்றாகும். ஏனெனில் கொம்புத்தேன் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்
நிறைந்துள்ளது. கொம்புத்தேன் மற்றும் காட்டுதேன் பாரம்பரிய உணவுப்பொருட்களுள்
ஒன்று.
*கொம்புதேன் அதிகஅளவு மகரந்த உள்ளடக்கங்களை கொண்டுள்ளது.
*கொம்புத்தேன் சித்த மருத்துவத்தில் ஒரு மிகச்சிறந்த துணை மருந்தாக
பயன்படுத்தப்படுகிறது.
கொம்புத்தேன் (அ)சிறு தேனீ தேன்
*கொம்புத்தேன் அல்லது சிறு தேனீ தேன் என்றும் அழைக்கப்படுகிறது.
*இவ்வகை தேனீக்கள் ஏப்பிஸ்பிலோரியா என அறிவியல் பெயர்கொண்டது. இந்த ஏப்பிஸ் இனத்தின் சிறிய தேனீக்கள் கொம்புகளிலும், குச்சிகளிலும் கூடுகள்கட்டிதேனை சேகரிக்கிறது.
*இந்த கொம்புதேனில் உள்ள அபிஸ் வகையைச் சேர்ந்த சிறிய தேனீக்கள் மற்ற தேனீ
வகையைப் போல அதிகம் தாக்குவதில்லை.
*கொம்புதேன் கூடுகளில் குறைவான அளவுகளில் மட்டுமே தேன் கிடைக்கும். பூவின் மகரந்தம் அதிக அளவில் இருப்பதனால் தேனின் அடர்த்தியுமே சிறிது கெட்டிதன்மை கொண்டதாக இருக்கும்.
கொம்புத்தேனின் பயன்கள்
*கொம்புத்தேன் ஒரு அற்புதமான உடல்கிருமிநாசினி மருந்தாகவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின்
வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
*சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம் மற்றும்
கபம் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்த கொம்புத்தேன் பயன்படுத்தப்படுகிறது.மேலும்
குடல்புண் மற்றும் வயிற்றுப் புண்ணுக்கும் கொம்புத்தேன் உதவுகிறது.
*கொம்புத்தேன் இதய நோய்கள் பக்கவாதம் மற்றும் சில வகையான புற்று நோய்களின்
அபாயத்தை குறைப்பதில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
* கொம்புத்தேன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
குழந்தைகளின் இருமலுக்கு அருமருந்து
*குழந்தைகளுக்கு இரவில் தூக்கத்தை கெடுக்கும் விதமாக வரக்கூடிய இருமலை போக்க தேன் நல்ல மருந்து என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வு ஒன்றில் கூறியுள்ளது.
*கால் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து கொடுத்தால் அது
வரக்கூடிய இருமலை போனஸ்ஆக ஆழ்ந்த தூக்கமும் தரக்கூடியது தேன்.
இதயத்தின் நண்பன்கொம்புத்தேன்
*தேன் இயற்கையாகவே வெப்பம் நிறைந்தது.
*தேன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை
அதிகரிக்கும்.
*இதயத்துக்குச் செல்ல வேண்டிய ரத்தத்தின் அளவை அதிகரித்து ரத்தம் உறைதலை
தடுக்கும் சக்தி கொம்புதேனுக்கு உள்ளது.
*கொம்புதேனில் உள்ள பாலிபீனால் இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும்
கரோனரி ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து ரத்தம் உறைதலை தடுத்து மாரடைப்பு
வராமல் காக்கும்.
*கொம்புத்தேன் இதயத்திற்கு தேவையான இரும்பு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்
போன்ற தாது பொருட்கள் மட்டும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் உள்ளன.
மன அழுத்தம் முதல் செரிமான பிரச்சனை வரை
*தேனில் உள்ள மிக முக்கிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் ஆன பாலிபீனால்கள் மன
அழுத்தம் மனச்சோர், மனப்பதற்றம் மற்றும் மன உளைச்சலை நீக்கி
மனதுக்கு அமைதியை தரும்.
*வலிப்பு நோய்க்கும் தேன் மிக நல்லது.
*குழந்தைகளை பாதிக்கும் வயிற்றுப்போக்கை நிறுத்துவதில் தேனுக்கு நிகர் தேன்
மட்டுமே என்று ஆய்வுகள் கூறுகின்றன.
*பூஞ்சைகள் மற்றும் நுன்கிருமிகளின் பெருக்கத்தை வெகுவாக குறைக்க கூடியது தேன்
இதில் உள்ள தாமிரச்சத்து, வைட்டமின் சி, சத்து மற்றும் பாலிபீனால்கள், வைரஸ் நோய்களை விரட்டி அடிக்க கூடியவை.
மேலும் படிக்க
கொம்புத்தேன்-wild honey hunters